- Advertisement -
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் சூதுகவ்வும் இரண்டாம் பாகத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளது.

நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், சஞ்சிதா ஷெட்டி,, கருணாகரன் மற்றும் முனீஸ்காந்த் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை திருக்குமரன் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் நகைச்சுவையான கதைக்களத்தில் அமைந்திருக்கும்.


முற்றிலும் கலகலப்பான தோணியில் எடுக்கப்பட்ட சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் அது முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.



