Homeசெய்திகள்சினிமாசூரி நடிக்கும் புதிய படம்.... டைட்டில் குறித்த அப்டேட்!

சூரி நடிக்கும் புதிய படம்…. டைட்டில் குறித்த அப்டேட்!

-

நகைச்சுவை நடிகரான சூரி கடைசியாக வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.

அதே சமயம் சூரி அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல், கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படம் இயக்குனர் வெற்றிமாறனின் கதையில் உருவாகிறது. இதில் மலையாளம் நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இது தயாராக உள்ளது. இந்தப் படத்தின் பூஜை இன்று கும்பகோணத்தில் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ‘கருடன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ