Homeசெய்திகள்சினிமாசௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் புதிய வெப் தொடர்..... தொடங்கி வைத்த சூப்பர் ஸ்டார்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் புதிய வெப் தொடர்….. தொடங்கி வைத்த சூப்பர் ஸ்டார்!

-

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து புதிய வெப் தொடரை தயாரிக்கிறார். நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்த வெப் தொடருக்கு கேங்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.நோவா ஆபிரகாம் இயக்குகிறார்.

இதன் பூஜை நேற்று தொடங்கியிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தன் தந்தையின் ஆசிர்வாதங்களுடன் இதனை தொடங்கி இருப்பதாகவும் , ‘நன்றி தலைவா… நன்றி சூப்பர் ஸ்டார்… நன்றி எனது அன்பான அப்பா’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

MUST READ