Homeசெய்திகள்சினிமாசௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ்..... ஹீரோவாக நடிக்கும் அசோக் செல்வன்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ்….. ஹீரோவாக நடிக்கும் அசோக் செல்வன்!

-

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் 3, மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கூட்டணியில் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பாகவே செய்திகள் வெளியாகி வந்தது. அதன்படி அமேசான் பிரைம் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வெப் சீரிஸில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து புதிய வெப் தொடரை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். நோவா ஆபிரகாம் இந்த படத்தை இயக்குகிறார். இதற்கு ‘கேங்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வெப் தொடரின் பூஜை நேற்று தொடங்கியுள்ளது. இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ