Homeசெய்திகள்சினிமாஷங்கர் மகள் திருமண வரவேற்பு விழா... கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் படையெடுப்பு...

ஷங்கர் மகள் திருமண வரவேற்பு விழா… கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் படையெடுப்பு…

-

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட், டோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்திய திரையுலகின் முன்னணி மற்றும் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்பவர் ஷங்கர். ஜெண்டில்மேன் படத்தின் மூலம் திரை உலகில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர் அடுத்தடுத்த படங்களில் வெற்றிகளை மட்டுமே சுவைத்தார். இறுதியாக ஷங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் வெளியானது. இதில் ரஜினிகாந்த் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.
தற்போது, கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல,ராம்சரணை வைத்து தெலுங்கில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்

இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர் திரையில் நாயகியாக நடித்து வருகிறார். விருமன் படத்தில் அறிமுகமான அவர், மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவரது அக்கா, ஐஸ்வர்யா கிரிக்கெட் வீரரான ரோஹித்தை திருமணம் செய்தார். ஆனால், அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பல குற்றச்சாட்டுகளும எழுந்தன. இதையடுத்து, இருவரும் பிரிந்துவிட்டனர்.இதைத் தொடர்ந்து, இவருக்கு தருண் கார்த்திகேயன் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதில் தமிழக முதலமைச்சர், ரஜினி, கமல்ஹாசன், நயன்தாரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், ஜெயம்ரவி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்பட கோலிவுட் நட்சத்திரங்களும், போனி கபூர், ஜான்வி கபூர், ரன்வீர் சிங் என பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். மேலும், மோகன்லால், சிரஞ்சீவி குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

MUST READ