பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் திடீரென ரஜினியை சந்தித்து பேசி உள்ளார்.சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடைசியாக வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நடிகர் ரஜினி, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவ்வாறு 73 வயதிலும் பிஸியான நடிகராக வலம் வரும் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசி உள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அதாவது நடிகர் சீமான் தனது பிறந்த நாளன்று ரஜினியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் படப்பிடிப்பு காரணமாக ரஜினியை சந்திக்க முடியாமல் போனதாகவும் எனவேதான் நேற்று (நவம்பர் 21) சீமான், ரஜினியை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் ரஜினி – சீமான் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் இந்த சந்திப்பில் அரசியல் தொடர்பான தகவல்கள் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
- Advertisement -