Homeசெய்திகள்சினிமாரஜினி-லோகேஷ் கூட்டணியை தட்டி தூக்கிய சன் பிக்சர்ஸ்...!

ரஜினி-லோகேஷ் கூட்டணியை தட்டி தூக்கிய சன் பிக்சர்ஸ்…!

-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் கூட்டணியில் தியேட்டர்களை தெறிக்க விட்ட படம் ஜெயிலர். இப்படம் 600 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது. ஏற்கனவே ரஜினி அனிருத் காம்பினேஷனில் வெளிவந்த பேட்ட, தர்பார் போன்ற படங்களில் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. அதேபோலவே ஜெய்லர் படத்திலும் பின்னணி இசை பெரிதளவு பேசப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 மற்றும் 171 ஆகிய படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். தலைவர் 170 படத்தை டிஜே ஞானவேல் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது லோகேஷ், ரஜினி காம்பினேஷனில் உருவாகும் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு லோகேஷின் விக்ரம், லியோ படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றிய அன்பறிவுதான் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர்.இதற்கு முன்னதாக ரஜினி நடித்த எந்திரன், 2.0, பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ