Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சுரேஷ் ரவி!

அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சுரேஷ் ரவி!

-

தொலைக்காட்சி தொகுப்பாளரான சுரேஷ் ரவி தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். இவர் ஏற்கனவே 2016 இல் வெளியான மோ என்னும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். அதன் பிறகு காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் யோகி பாபு உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது.

இந்நிலையில் பிரவீன் சரவணன் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க சுரேஷ் ரவி உள்ளார். இதில் இவருடன் இணைந்து சதீஷ், கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடிக்க உள்ளனர். மாபகோஸ் கம்பெனி இந்த படத்தை தயாரிக்கிறது ஜோன்ஸ் ரூபட் இதற்கு இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. அப்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி கூட்டணியிலான இந்த படத்திற்கு ‘முஸ்தபா முஸ்தபா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ