இணைய தொடரில் இணைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா தம்பதி
- Advertisement -
இணைய தொடரில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. 90-களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார் மாயாவி, பேரழகன், சில்லனு ஒரு காதல், காக்க காக்க ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்தன. இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், இடைவெளிக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக அவர் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் ஜாக்பாட், பொன்மகள், மகளிர் மட்டும், ராட்சசி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி மலையாளம், இந்தி படங்களிலும் கமிட்டாகி நடிக்கிறார். இறுதியாக ஜோதிகா நடிப்பில் சைத்தான் திரைப்படம் வெளியானது. சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நடிகை ஜோதிகாவும், நடிகர் சூர்யாவும் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி, இருவரும் இணைந்து புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், ஆக்ஷம் திரில்லர் கதைக்களத்தில் இந்த தொடர் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தொடரின் இயக்குநர் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.