நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்தது திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ் , கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 3D தொழில்நுட்பத்தில், வரலாற்று சரித்திர படமாக, ஹை பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக படத்தின் கிளிம்ஸ் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பட குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நிலையில், நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டனர்.
இதன் மூலம் கங்குவா படத்தில் மீதான ஹைப் அதிகமாக்கிக் கொண்டே போகிறது. இதற்கிடையில் படக்குழுவினர் சிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கசக்கமாக தூண்டிவிடும் விதத்தில் பல மிரட்டலானா அப்டேட்டுகளை கொடுத்து வந்தனர். அதே சமயம் சமீபத்தில் விபத்திற்கு பிறகு கங்குவா படப்பிடிப்பில் ஒரே ஒரு நாள் மட்டும் பங்கேற்று படப்பிடிப்பை நிறைவு செய்தார் சூர்யா.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக, கங்குவா படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபி தியோலின் போர் சம்பந்தமான காட்சிகளும் நிறைவு பெற்றதாம். இன்னும் விடுபட்ட சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.