“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் நடிகர் சிம்புவுடன் கைகோர்த்தார். சிம்பு நடிக்கும் 48வது திரைப்படமாக உருவாகிவரும் இந்த புதிய படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் படத்தின் வேறு எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் இப்படம் கைவிடப்பட்டு விட்டது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக படத்தின் படப்பிடிப்புகள் நடக்கிறதா இல்லையா என்ற குழப்பத்திலேயே ரசிகர்கள் கிட்டத்தட்ட இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படியாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது “STR 48” திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான “300” எனும் படத்தின் சாயலில் பீரியட் படமாக உருவாக உள்ளது. ஏகப்பட்ட வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறவுள்ளன. இதற்கான வேலைகளை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். ஆனால் வி எஃப் எக்ஸ் காட்சிகள் எடிட்டிங்கின் பொழுது படத்தின் காட்சிகள் எதுவும் லீக் ஆகி விடக்கூடாது எனும் காரணத்தால், வி.எஃப் எக்ஸ் தொழில்நுட்ப வல்லுனர்களை சென்னைக்கு வரவழைத்து அங்கு அலுவலகம் அமைத்து பணிகளை மிக ரகசியமாக நடத்தி வருகிறதாம் ராஜ்கமல் நிறுவனம். இந்த காரணத்தினால் தான் படத்தை பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என செய்திகள் கிடைத்துள்ளன. இச்செய்தியை கேட்டவுடன் சிம்புவின் ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்து பெருமூச்சு விட்டுள்ளனர்.
- Advertisement -