சூர்யாவின் கருப்பு பட ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் 45 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கருப்பு. இந்த படத்தை ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நட்ராஜ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜியும் இதில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என பல தகவல்கள் வெளிவந்தது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.


