spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவந்தது அசத்தலான கங்குவா பட அறிவிப்பு

வந்தது அசத்தலான கங்குவா பட அறிவிப்பு

-

- Advertisement -
கங்குவா படத்தின் இரண்டாவது தோற்றம் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருப்பவர் நடிகர் சூர்யா. சிறந்த கதைகளைதேர்வு செய்து நடிப்பதில் சூர்யா வல்லவர் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. படம் வரவேற்பை பெற்ற அதே சமயம், சூர்யாவின் கதாபாத்திரமும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார்.

we-r-hiring
வரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமில்லாமல் சுமார் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரில் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து தாய்லாந்து காட்டுப் பகுதியில் நடைபெற்றது. இதையடுத்து, சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. அப்போது சூர்யாவுக்கு விபத்தும் ஏற்பட்டது.

அண்மையில் கங்குவா படத்தில் தனக்கான காட்சிகளை நிறைவு செய்ததாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது தோற்றம் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ