spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறனின் வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.......கமிட்டானது தனுஷா? சூரியா?

வெற்றிமாறனின் வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா…….கமிட்டானது தனுஷா? சூரியா?

-

- Advertisement -

வெற்றிமாறனின் வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.......கமிட்டானது தனுஷா? சூரியா?பிரபல இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி படத்தின் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிமாறனின் வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.......கமிட்டானது தனுஷா? சூரியா?இருப்பினும் சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவதாலும், விடுதலை இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் பிஸியாக இருப்பதாலும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் வாடிவாசல் படத்தில் நடிகரும் இயக்குனருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அதேசமயம் நடிகை ஆண்ட்ரியா இதில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போவதால் படத்தில் இருந்து சூர்யா விலகியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதே சமயம் தனுஷ் இந்த படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் சூர்யா தான் ஹீரோ என்று ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விற்கப்பட்டதாம். அதன் பிறகு கதாநாயகனை மாற்ற முடியாது எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றிமாறனின் வாடிவாசலில் இருந்து விலகிய சூர்யா.......கமிட்டானது தனுஷா? சூரியா?இருந்தபோதிலும் சூழ்நிலை மாற்றத்தால் கதாநாயகன் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சூர்யாவிற்கு பதில் நடிகர் சூரி இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு கமிட் ஆகியிருப்பதாகவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ