நடிகைகள் மத்தியில் போட்டி அவசியம்… நடிகை தமன்னா கருத்து…
- Advertisement -

தமிழில் அறிமுகமாகி இன்று இந்தியா முழுவதும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் விஜய், சூர்யா, அஜித்குமார், கார்த்தி, தனுஷ், ரஜினிகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். அதேபோல, தெலுங்கிலும் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் அவர் ஜோடி சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தமன்னா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அரண்மனை 4. சுந்தர் சி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்திற்கும் வருகிறது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா,, நடிகைகள் மத்தியில் போட்டி அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும், சினிமா துறையில் போட்டிகள் இருந்தாலும், நாம் நம்மை போலவே நடித்தால் போதும், நானும் ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடனமாடியபோது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.