Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாராவிற்கு பதில் தமன்னா.... குஷ்பு கொடுத்த விளக்கம்!

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாராவிற்கு பதில் தமன்னா…. குஷ்பு கொடுத்த விளக்கம்!

-

- Advertisement -

'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாராவிற்கு பதில் தமன்னா.... குஷ்பு கொடுத்த விளக்கம்!கடந்த 2020இல் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க சுந்தர். சி இந்த படத்தை இயக்குகிறார். ஹிப் ஹாப் ஆதி படத்திற்கு இசையமைப்பதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் சுந்தர். சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, ரெஜினா ஆகியோரும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாராவிற்கு பதில் தமன்னா.... குஷ்பு கொடுத்த விளக்கம்!இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் படப்பிடிப்பு தளத்தில் சுந்தர். சிக்கும் நயன்தாராவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த பிரச்சனை காரணமாக சுந்தர். சி, மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க போவதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “மூக்குத்தி அம்மன் 2 குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. தயவுசெய்து அதை தவிர்த்திடுங்கள். படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. சுந்தர். சி ஒரு முட்டாள்தனமான நபர் கிடையாது. நயன்தாரா திரைத்துறையில் சிறந்த நடிகையாக தனது தகுதியை நிரூபித்து இருக்கிறார். அவர் மீண்டும் இந்த வேடத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. இது போன்ற வதந்திகள் இந்த படத்திற்கு திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பது எல்லாம் நன்மைக்கு. உங்களின் தந்தை மட்டுமே நம்புகிறோம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி. எனவே நிதானமாக இருங்கள். பொழுதுபோக்கு மன்னரின் மற்றொரு பிளாக்பஸ்டரை எதிர் நோக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ