Homeசெய்திகள்சினிமாஎல்வின் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புல்லட் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்!

எல்வின் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புல்லட் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புல்லட் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் லாரன்ஸ் புல்லட் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் எல்வின் லாரன்ஸுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் நடிக்கிறார். மேலும் சிவா சாரா, ஆர் சுந்தர்ராஜன், கே பி ஒய் வினோத், சென்ட்ராயன், சாம்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து ராகவா லாரன்சும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். இந்த படத்தை 5ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கதிரேசன் தயாரிக்கிறார்.
சாம் சி எஸ் இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான மாவீரன் மற்றும் ஜெயிலர் திரைப்படத்தில் சுனில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ