Homeசெய்திகள்சினிமா'தலைவர் 171' படப்பிடிப்பு இந்த மாதத்தில் தான் தொடங்கும்..... லோகேஷ் சொன்ன பதில்!

‘தலைவர் 171’ படப்பிடிப்பு இந்த மாதத்தில் தான் தொடங்கும்….. லோகேஷ் சொன்ன பதில்!

-

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். 'தலைவர் 171' படப்பிடிப்பு இந்த மாதத்தில் தான் தொடங்கும்..... லோகேஷ் சொன்ன பதில்!அதேசமயம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் உருவெடுத்துள்ளார். இவர் அடுத்ததாக ரஜினி நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU கான்செப்டில் இல்லாமல் தனி கதையாக உருவாக இருக்கிறது. அதன்படி இந்த படம் ஆக்சன் படமாக தயாராக இருக்கிறதாம். மேலும் இந்த படத்தில் நடிகர் ரஜினியை டிஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் இளமையாக காண்பிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருகிறாராம். அதாவது தளபதி பட லுக்கில் ரஜினியை காட்ட இருக்கிறாராம். இவ்வாறு தலைவர் 171 படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்களும் அதனை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ் ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று கூறியிருந்தார். 'தலைவர் 171' படப்பிடிப்பு இந்த மாதத்தில் தான் தொடங்கும்..... லோகேஷ் சொன்ன பதில்!ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகளுக்காக மட்டுமே 4 முதல் 5 மாதங்கள் எடுத்துக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். எனவே ரஜினி ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ