- Advertisement -
தளபதி 69 தான் தான் நடிக்கும் இறுதி திரைப்படம் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

கோலிவுட்டே கொண்டாடும் நாயகன் நடிகர் விஜய். தமிழில் மட்டுமே திரைப்படங்கள் நடிக்கும் விஜய்க்கு, தமிழ் மொழியைத் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்திந்திய மொழிகளிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. காதல், காமெடி, ஆக்ஷன் என சிறந்த கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய்க்கு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.


கடந்த ஆண்டு லியோ படத்தை கொடுத்த நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு தி கோட் என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜய் 69-படத்திலும் கமிட்டாகி உள்ளார். இத்திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

