தளபதி69 அப்டேட் … பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் இணையும் விஜய்…
- Advertisement -
விஜய் நடிக்கும் 69-வது படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் கோலிவுட் நாயகன் விஜய். தளபதி என்று அழைக்கப்படும் அவர் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். விஜய் படங்கள் வெளியீடு என்றாலே அன்று தமிழ்நாடே கொண்டாட்டம், கோலாகலம் என விழாக்கோலம் பூண்டிருக்கும். அதற்கு ஏற்ப நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழை தாண்டி விஜய்யின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாவதால், அங்கும் அவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம்

கடந்த ஆண்டு லியோ படத்தை கொடுத்த நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு தி கோட் என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தெலுங்கில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தளபதி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், இதுவரை விஜய் வாங்கிடாத சம்பளத்தையும் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.