Homeசெய்திகள்சினிமாசிம்பு படத்திற்கு தமன் இசையமைப்பதாக தகவல்

சிம்பு படத்திற்கு தமன் இசையமைப்பதாக தகவல்

-

கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அனிருத் இசையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பான் இந்திய அளவில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்திற்காக சிம்பு தாய்லாந்திலும் இப்போது லண்டனிலும் தற்காப்புக் கலைப் பயிற்சியை தீவிரமாக செய்து முடித்துள்ளார். இந்தப் படம் வரலாற்று ஆக்‌ஷன் என்டர்டெய்னராகவும், மாஸ் காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்கும் என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்திற்கு தமன் இசை அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றுபடக்குழு அறிவித்துள்ளது.

MUST READ