spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'தனி ஒருவன் 2' அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!

ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!

-

- Advertisement -

தனி ஒருவன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு தற்போது 7 வருடங்கள் கழித்து, தனி ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. தற்போது அதற்கான அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி உள்ளது. “உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்னும் வசனமே தனி ஒருவன் படத்தின் அடிநாதமாக இருந்தது.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த ப்ரோமோவில்”நீ யார் என்று சொல் உன் எதிரி யார் என்று சொல்கிறேன்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளன.  இதன் மூலம் இப்படம் ஹீரோவை தேடி வில்லன்  வரும் பாணியிலான படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. வெறும் கமர்சியல் காட்சிகளாக இல்லாமல் புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகளால் தான் தனி ஒருவன் படத்தின் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதேபோல இப்படமும் ஒரு புத்திசாலித்தனமான படமாக இருக்கும் என நம்பலாம். படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே வில்லனான சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் தான். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழுத்தமான வில்லனாக அரவிந்த்சாமி மிரட்டி இருந்தார்.

we-r-hiring

தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் யார் என்பதை இன்னும் வெளிவிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். நிச்சயமாக ஒரு வலுவான வில்லனை எதிர்பார்க்கலாம். இப்படத்திலும் நாம் டீசரிலேயே இப்படம் அரசியல் பின்னணியிலான கதைகளத்தை தான் கொண்டிருக்கும் என்பதையும் கூறிவிட்டனர். முதல் பாகம் வில்லன் இறப்பது போன்று கிளைமாக்ஸ் ஆக இருக்கும். அதன் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய எம் ராஜா தான் தனி ஒருவன் 2 படத்தையும் எழுதி இயக்கவுள்ளார். ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க இருக்கிறார். மேலும் தற்போது வெளியாகி உள்ள  இந்த ப்ரோமோவிற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைதுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ