spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'தனி ஒருவன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

தனி ஒருவன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் எம் ராஜா இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இன்றுவரையிலும் இப்படம் பலரின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சித்தார்த் அபிமன்யூவாக நடித்திருந்த அரவிந்த் சுவாமியின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எம் ராஜா இயக்க இருக்கிறார். இது குறித்த பல தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த படத்தின் அறிவிப்பு நாளை மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

MUST READ