Homeசெய்திகள்சினிமாதனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

-

- Advertisement -
தனி ஒருவன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன் என ஆறு வெற்றிப்படங்களை வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்து வரும் சகோதரர்கள் இயக்குநர் மோகன் ராஜாவும், ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இப்படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மக்கள் மனதில் முத்திரை பதிக்கும் அளவிற்கு அழுத்தமான படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குநர் மோகன் ராஜாவும், சவாலான வேடங்களில் சளைக்காமல் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள நடிகர் ஜெயம் ரவியும் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் யார் என்பதை இன்னும் வெளிவிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்

ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

MUST READ