Homeசெய்திகள்சினிமாபிரபல நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

-

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.பிரபல நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 2002 ஆம் ஆண்டு தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நகைச்சுவை நடிகர் சேஷு. அதே சமயம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பரீட்சையமானவர். அதைத்தொடர்ந்து 2004 இல் சூப்பர் டிப்பர் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரிலும் நடித்து புகழ்பெற்றார்.
சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வர வீராப்பு, வேலாயுதம், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற பல படங்களில் காமெடியனாக தொடர்ந்து நடித்து வந்தார். பிரபல நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி!அந்த வகையில் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் கூட சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடித்திருந்தார் சேஷு. நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர் வீடு திரும்ப வேண்டும் என சேஷு உடன் பணியாற்றிய சக நடிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ