Homeசெய்திகள்சினிமாசத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பிரபல இயக்குனர்!

சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பிரபல இயக்குனர்!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் பிரபு ஜெயராமுக்கு திருமணம் நடந்து முடிந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

சத்தமே இல்லாமல் திருமணம் முடித்த பிரபல இயக்குனர்!பிரபு ஜெயராம் என்பவர் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியான என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஆர் எஸ் கார்த்திக், ஐரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. குணா பாலசுப்பிரமணியன் இதற்கு இசையமைத்திருந்தார். அருண் கிருஷ்ண ராதாகிருஷ்ணன் இதற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே பிரபு ஜெயராம் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. சத்தமே இல்லாமல் திருமணம் முடித்த பிரபல இயக்குனர்!இந்நிலையில் அவர் சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தீபா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரபு ஜெயராமிற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரபு ஜெயராம் – தீபா இருவரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ