- Advertisement -
தி ரோட் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி ரோட். AAA சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அருண் வசீகரன் இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் திரிஷாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், சபீர் கல்லாரக்கல் ,எம் எஸ் பாஸ்கர், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, வேல ராம மூர்த்தி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மேலும் சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.