spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய்குமார் நடித்துள்ள எலக்சன்... புதிய பாடல் ரிலீஸ்....

விஜய்குமார் நடித்துள்ள எலக்சன்… புதிய பாடல் ரிலீஸ்….

-

- Advertisement -
விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் எலக்சன் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் குமார். வழக்கமான காதல் மற்றும் கமர்ஷியல் படங்களாக இல்லாமல் அரசியல் மற்றும் சமூக கருத்துகள் பேசும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். உறியடி, பைட் கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார் விஜய்குமார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் எலக்சன். இத்திரைப்படத்தை, சேத்துமான் பட புகழ் இயக்குநர் தமிழ், எலக்சன் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

we-r-hiring
இது அவர் இயக்கும் இரண்டாவது திரைப்டமாகும். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில், அயோத்தி படத்தில் நடித்து பிரபலம் அடைந்த ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ரீல் குட் பிலிம்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில் எலக்சன் என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், எலக்சன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. மன்னவன் எனத் தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வரும் மே மாதம் 17-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ