Homeசெய்திகள்சினிமாவிற்பனைக்கு வரும் விஜய் டிவி… வாங்குவதற்கு போட்டியில் குதித்த 3 பெரும் நிறுவனங்கள்!

விற்பனைக்கு வரும் விஜய் டிவி… வாங்குவதற்கு போட்டியில் குதித்த 3 பெரும் நிறுவனங்கள்!

-

- Advertisement -

தமிழில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் முக்கியமானது விஜய் டிவி. விஜய் டிவியில் நடந்து வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களை மிகவும் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் காமெடி கலந்துகட்டி கொடுத்து மக்களைக் கவர்ந்து விடுகிறார்கள்.
விஜய் டிவி நிறுவனத்தை தற்போது டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் என இரண்டும் சேர்ந்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சி செய்தியாகடிஸ்னி விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹாட்ஸ்டார் தளத்தை வைத்துக் கொண்டு விஜய் டிவியை மட்டும் விற்பனை செய்வது என்று முடிவு செய்துள்ளார்களாம். விஜய் டிவியை வாங்க மூன்று முன்னணி நிறுவனங்கள் போட்டியில் குதித்துள்ளனவாம்.
முதலில் இருப்பது அம்பானியின் ஜியோ நிறுவனம். அடுத்து டாடா குழுமம். அதையடுத்து உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம். இப்படி 3 பெரிய நிறுவனங்கள் போட்டாபோட்டி போட்டு விஜய் டிவியை வாங்க இருப்பதால் பெரும் தொகைக்கு விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

MUST READ