திருப்பதியில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம்
- Advertisement -

நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து புதுப்படங்களில் கமிட்டாகி வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் முதல் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவௌிக்கு பிறகு தொடங்கி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதனிடையே, விடாமுயற்சி படத்தின் வௌியீட்டுக்கு முன்பே நடிகர் அஜித்குமார் மற்றொரு திரைப்படத்தில் கமிட்டானார். குட் பேட் அக்லி என்று தலைப்பிடப்பட்ட இத்திரைப்படத்தை, மார்க் ஆண்டனி என்ற ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசை அமைப்பதாக தெரிகிறது
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பட்டு வேட்டி, சட்டையில் வந்த அஜித்குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.