spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பு தளத்தில் அத்துமீறிய பிரபல நடிகர்கள்... நிரந்தரமாக படங்களில் நடிக்கத் தடை!

படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறிய பிரபல நடிகர்கள்… நிரந்தரமாக படங்களில் நடிக்கத் தடை!

-

- Advertisement -

மலையாள நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் படங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் சமீபத்தில் படப்பிடிப்பில் மோசமாக நடந்து கொண்டதாக பல புகார்கள் வந்ததையடுத்து இருவரும் இனி மலையாளப் படங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

 

சமீப காலமாக இந்த இரண்டு நடிகர்களிடமிருந்து மோசமான நடத்தை புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு கேரளா திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பு (FEFKA) மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து இனி படங்களில் நடிக்கத் தடை விதித்துள்ளனர்.

ஷேன் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி போதைப் பொருள் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. மேலும் இருவரும் படப்பிடிப்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியதாலும் கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இனி வரும் மலையாளப் படங்களில் இருவரும் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ