ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் தற்போது ஹண்டர், கால பைரவா ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர காஞ்சனா 4 திரைப்படத்தையும் தானே இயக்கி, நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். இப்படமானது லோகேஷ் கனகராஜின் எல்சியு -வின் கீழ் உருவாகிறது. இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சமீபத்தில் இந்த படத்தின் பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்தது. அதே சமயம் இந்த படத்தில் நிவின் பாலி, மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் நடிக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் மற்றுமொரு கதாநாயகி யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.