- Advertisement -
தமிழ் சினிமா வளர வளர, தன்னையும் வளர்த்திக் கொண்டவர் சிம்பு. “ஐ எம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்”, என சுட்டிச்சிறுவனாக சினிமாவில் தடம் பதித்த சிம்பு, இன்று சினிமா வித்தகனாக உயர்ந்து நிற்கிறார். குழந்தை நட்சத்திரமாக பிரசிவித்த சிம்பு, தந்தையின் கரம்பிடித்து இளம் நாயகனாகவும் முதல் அடி வைத்தார். காதல் அழிவதில்லை படத்தில், காதலியை கரம் பிடிக்க முடியாமல் துடிக்கும் இளைஞராக நடித்து ரசிகர்களை கண்ணீரால் கரையவிட்ட சிம்பு, தனது அடுத்தடுத்த படங்களில் ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்தார்.

செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என ஒரே லைனில் சென்ற சிம்பு, மாநாடு திரைப்படத்தின் மூலம், சினிமாவில் விட்ட கொடியை மீண்டும் பிடித்தார். நடிப்பு மட்டுமல்ல, நடனத்திலும் கெட்டிக்காரன் என்பதை தன் ஒவ்வொரு பாடல் வழியாகவும் உணர்த்திக்கொண்டே இருப்பார். சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் பெரும் ஹிட் அடித்தன. இடைவெளிக்கு பிறுகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள சிம்பு, கோலிவுட்டில் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.




