Homeசெய்திகள்சினிமாலோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய்குமார்... வெளியானது அதிரடி அறிவிப்பு...

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய்குமார்… வெளியானது அதிரடி அறிவிப்பு…

-

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்பம் முதலே சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி அதில், வெற்றியும் கண்டு வருகிறார். டாப் நடிகர்களை வைத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனும் திரை உலகத்தை தொடக்கி வைத்த பெருமையும் லோகேஷ் கனகராஜை தான் சேரும் .அடுத்ததாக இவர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்தயாரிப்பு நிறுவனத்திற்கு G SQUAD என பெயர் வைத்துள்ளார். நிறுவனத்தின் லோகோவில் தேளை வைத்து வடிவமைத்துள்ளனர். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் வரும் போதைப் பொருள்களில் முத்திரையாக தேள் சின்னம்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அதை குறிப்பிடும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக உறியடி பட புகழ் விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இன்று வெளியாக உள்ளது. படத்தின் தலைப்பும் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

MUST READ