பிரபல நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஊர்வசி இன்று வரையிலும் விடாமல் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார். ஊர்வசியின் நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம், அப்பத்தா உள்ளிட்ட படங்கள் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக அமைந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஊர்வசி, J. பேபி எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார். படத்தை விட்டாஸ் மீடியா மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ள நிலையில் ஜெயந்த் சேது ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஊர்வசியுடன் இணைந்து அட்டகத்தி தினேஷ், மாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
- Advertisement -