Homeசெய்திகள்சினிமாரணம் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

ரணம் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

-

அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ரணம் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கெண்டாடினர்.

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வைபவ். இவர் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேயாதா மான், கப்பல், பபூன், ஆர்.கே.நகர், அரண்மனை, ஆர்.கே.நகர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். இது தவிர பல படங்களில் வில்லன் வேடத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரணம். ஷெரிஃப் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை மது நாகராஜன் தயாரித்துள்ளார். படத்தில் வைபவுடன் இணைந்து தான்யா ஹோப் மற்றும் நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கொரெல்லி இசை அமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.

ரணம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ