spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா வெளியேறியதால் தயாரிப்பில் ஏற்பட்ட மாற்றம்… பாலா, அருண் விஜய் கூட்டணியின் ‘வணங்கான்’ அப்டேட்!

சூர்யா வெளியேறியதால் தயாரிப்பில் ஏற்பட்ட மாற்றம்… பாலா, அருண் விஜய் கூட்டணியின் ‘வணங்கான்’ அப்டேட்!

-

- Advertisement -

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் தயாரிப்பு பொறுப்பை சுரேஷ் காமாட்சி கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. முதலில் இந்தப் படத்தில் சூர்யா தன் நடித்து வந்தார். சில நாட்கள் கன்னியாகுமரியில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா இந்த படத்தை விட்டு விலகினார்.

we-r-hiring
bala and sruiya
bala and sruiya

அதன் பிறகு சூர்யாவுக்கு பதில் அருண் விஜய், வணங்கான் படத்தில் இணைந்தார். இதில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். முதலில் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வந்தது. சூர்யா வெளியேறியதால் படத்தில் வேறு தயாரிப்பு நிறுவனம் இணைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகியுள்ளது. வணங்கான் படத்தின் தயாரிப்பு பொறுப்பை சுரேஷ் காமாட்சி கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

arun vijay and bala
arun vijay and bala

நூடுல்ஸ் படத்தின் விழாவில் கலந்துகொண்ட அவர் இதை வெளிப்படுத்தியுள்ளார். ஏழுகடல் ஏழுமலை, ராஜாகிளி படங்களை அடுத்து வணங்கான் படத்தையும் அவர் கையில் எடுத்துள்ளார்.

MUST READ