- Advertisement -
பிரேமம் படத்தை போல மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஹிருதயம் திரைப்படம் பிரபலம் அடைந்தது. இப்படத்தில் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். தர்ஷனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹிருதயம் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்தது. வர்ஷங்களுக்கு ஷேஷம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் நிவின் பாலி கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.




