பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, சென்னை 600028, கோவா, சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடைசியாக நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் GOAT திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மைக் மோகன் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இப்படம் டைம் டிராவல் சம்பந்தமான கதை படத்தில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் திரிஷா பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளதாகவும் பல அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படக்குழுவினர் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்காக காத்திருக்கின்றனர். எனவே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபுவை டேக் செய்து GOAT பட அப்டேட்டை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். இதற்கு வெங்கட் பிரபுவும் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்.
Aniyayam pannadheenga!! Update miga viraivil nanba nanbis!!! #GOAT and trust me it will be a sirapana update 🙏🏽🙏🏽🙏🏽
— venkat prabhu (@vp_offl) March 25, 2024
இருப்பினும் ரசிகர்கள் விடாமல் அப்டேட்டை கேட்டு வருவதால் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், “அநியாயம் பண்ணாதீங்க. விரைவில் அப்டேட் வரும் நண்பா, நண்பீஸ். நம்புங்கள் அது சிறப்பான அப்டேட்டாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.