Homeசெய்திகள்சினிமாதளபதி 68 அறிவிப்பு சும்மா தெறிக்கும்.... வெங்கட் பிரபு கொடுத்த ஹின்ட்!

தளபதி 68 அறிவிப்பு சும்மா தெறிக்கும்…. வெங்கட் பிரபு கொடுத்த ஹின்ட்!

-

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அதைப்போல விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் இந்த படம் சம்பந்தமாக தொடர்ச்சியாக பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க போகிறார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி படத்தில் எஸ் ஜே சூர்யா, ஜெய் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இது சம்பந்தமான அறிவிப்பு எப்போது வரும் என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நேற்று கூட வெங்கட் பிரபுவின் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் குறித்த அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் கட்டாயம் இது விஜயின் தளபதி 68 குறித்து அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக வெங்கட் பிரபு, மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்த ஆனந்த் நடிக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருந்தார். இந்த இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேசமயம் ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபுவிடம் ட்விட்டரில் தளபதி 68 அப்டேட் வரும் என நினைத்தேன் என்று கமெண்டில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு வெங்கட் பிரபு, தளபதி 68 அறிவிப்பு சும்மா தெறிக்கும் காத்திருங்கள் என்று பதில் அளித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபுவின் இந்த பதிலானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ