spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி கூட்டணியின் 'விடுதலை 2'.... ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி கூட்டணியின் ‘விடுதலை 2’…. ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

விடுதலை 2 படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி கூட்டணியின் விடுதலை 2.... ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த 2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை பாகம் 1. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதிகார வர்க்கத்திற்கு கீழ் போராடும் மக்களை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி தவிர மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.விஜய் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி கூட்டணியின் விடுதலை 2.... ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்! நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளனர். இருப்பினும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்ற விடுதலை முதல் பாகத்தின் வெற்றி, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரையிடப்படுவதற்கு முன்பாகவே இந்த படம் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ஆகையினால் ரசிகர்கள் பலரும் விடுதலை 2 திரைப்படத்தை காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி கூட்டணியின் விடுதலை 2.... ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!ஏற்கனவே விடுதலை 2 திரைப்படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு வேலைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் படமானது 2024 டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ