Homeசெய்திகள்சினிமாஅஜித், திரிஷாவின் 'விடாமுயற்சி'.... 'Sawadeeka' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

அஜித், திரிஷாவின் ‘விடாமுயற்சி’…. ‘Sawadeeka’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

-

- Advertisement -

அஜித், திரிஷா நடிக்கும் விடாமுயற்சி படத்திலிருந்து Sawadeeka பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.அஜித், திரிஷாவின் 'விடாமுயற்சி'.... 'Sawadeeka' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

அஜித் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்திருந்தனர். மீண்டும் இந்த கூட்டணி 5வது முறையாக விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. எனவே ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, விஜே ரம்யா, அரவிந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தில் இருந்து டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. எனவே 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் இன்று (டிசம்பர் 27) இந்த படத்தில் இருந்து ஆண்டனிதாசன் மற்றும் அனிருத்தின் குரலிலும், தெருக்குரல் அறிவின் வரிகளிலும் உருவான ‘Sawadeeka’ எனும் பாடலின் ஆடியோ வெளியானது. இந்தப் பாடலில் வித்தியாசமான வரிகள் இடம்பெற்று இருந்த நிலையில் இது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ