Homeசெய்திகள்சினிமாஇன்று மதியம் வெளியாகும் 'விடாமுயற்சி' அப்டேட்.... என்னவாக இருக்கும்?

இன்று மதியம் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. என்னவாக இருக்கும்?

-

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படமானது அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது. இன்று மதியம் வெளியாகும் 'விடாமுயற்சி' அப்டேட்.... என்னவாக இருக்கும்?இந்தப் படத்தை மீகாமன், தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் படத்தை தயாரிக்கிறார். அனிருத்தின் இசையிலும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிலும் இந்த படம் தயாராகி வருகிறது. படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மதியம் வெளியாகும் 'விடாமுயற்சி' அப்டேட்.... என்னவாக இருக்கும்?அதன்படி இந்த படமும் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையிடப்பட முழு வீச்சில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. ஆதலால் கடந்த ஒரு வருடங்களாக நிலுவையில் இருக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் கிட்டத்தட்ட முடித்து விட்டனர். சமீபத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்கிடையில் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) மதியம் 1.09 மணி அளவில் புதிய அப்டேட் வெளிவர இருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று மதியம் வெளியாகும் 'விடாமுயற்சி' அப்டேட்.... என்னவாக இருக்கும்?எனவே இந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். அனேகமாக இந்த அப்டேட் படப்பிடிப்பு நிறைவடைந்தது சம்பந்தமான அப்டேட்டாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ