Homeசெய்திகள்சினிமாவிதார்த், யோகி பாபு கூட்டணியின் 'குய்கோ'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விதார்த், யோகி பாபு கூட்டணியின் ‘குய்கோ’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

விதார்த், யோகி பாபு கூட்டணியின் 'குய்கோ'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!நடிகர் விதார்த், மைனா, குரங்கு பொம்மை போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர். நல்லா கதை அம்சங்களை தேர்ந்தெடுத்த நடிக்க கூடியவர் விதார்த். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமரன், லாந்தர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேசமயம் குய்கோ எனும் திரைப்படத்திலும் விதார்த் நடித்துள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் விதார்த்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் செழியன் இயக்கியுள்ள இந்த படத்தை ஏ எஸ் டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண்டனி தாசன், கெவின் மிராண்டா உள்ளிட்டோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விதார்த், யோகி பாபு கூட்டணியின் 'குய்கோ'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!படத்தில் விதார்த் மற்றும் யோகி பாபு உடன் இணைந்து இளவரசு, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த கதை களத்தில் உருவாகியுள்ள படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ