spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்ஐசி' பட டீசர் எப்போது?

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்ஐசி’ பட டீசர் எப்போது?

-

- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்ஐசி' பட டீசர் எப்போது?

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான பிரதிப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். எல் ஐ சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி செட்டி நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா மையம், சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்ஐசி' பட டீசர் எப்போது?இந்நிலையில் இந்த படத்தில் டீசர் வருகின்ற ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ