Homeசெய்திகள்சினிமாஅமெரிக்காவில் ஒலித்த விஜய் ஆண்டனி பாடல்.... குத்தாட்டம் போட்டு ரசித்த நடுவர்கள்...

அமெரிக்காவில் ஒலித்த விஜய் ஆண்டனி பாடல்…. குத்தாட்டம் போட்டு ரசித்த நடுவர்கள்…

-

- Advertisement -
அமெரிக்காவில் நடைபெற்ற பிரபல நடன நிகச்சியில், விஜய் ஆண்டனி பாடலுக்கு ஒரு குழு நடனம் ஆடியுள்ள காணொலி வைரலாகி வருகிறது.

அமெரிக்காஸ் காட் டேலண்ட் என்ற பிரபலமான நடன நிகழ்ச்சி, கடந்த 1-ம் தேதி முதல் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அமெரிக்காவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த அன்பீட்டபிள் என்ற நடனக்குழு பங்கு பெற்றது. இதில் விஜய் ஆண்டனி இசை அமைத்த நாக்க மூக்க பாடலு்ககு அவர்கள் நடனமாடி அசத்தியிருக்கின்றனர். பாடலையும், அத்துடன் சேர்ந்த மாணவர்களின் நடனத்தையும் கண்டு அசத்து போன நடுவர்கள் தங்களை அறியாமல் இருக்கையில் அமர்ந்தபடி குத்தாட்டம் போட்டனர்.

பி.வி.பிரசாத் இயக்கத்தில் நகுல், சுனைனா உள்பட பலர் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான படம் காதலில் விழுந்தேன். இந்த திரைப்படத்தில் தான் நாக்கு மூக்க என்ற இப்பாடல் இடம் பெற்றிருந்தது. படம் வெளியாவதற்கு முன்பே இந்த பாடல், பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து விட்டது. சமூக வலைதளங்களில் பெரிதளவில் பயன்பாட்டில் இல்லாத காலக்கட்டத்தில் கூட இப்பாடலுக்கு தமிழ்நாடு மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பாடல் ஒலிபரப்பானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடனமாடும் காணொலியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ