Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரோமியோ எனும் திரைப்படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கொலை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரத்தம் எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சி எஸ் அமுதன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம்வென்சஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகும் என்பதையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.

MUST READ