spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டாவின் 'ஃபேமிலி ஸ்டார்' பட அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு!

விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ பட அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் பட இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் தேவரகொண்டாவின் 'ஃபேமிலி ஸ்டார்' பட அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு!

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, குஷி படத்திற்கு பிறகு ஃபேமிலி ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சீதாராமம் பட புகழ் நடிகை மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். இந்தப் படத்தை பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார். கீத கோவிந்தம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் தேவரகொண்டா, பரசுராம் பெட்லா கூட்டணி ஃபேமிலி ஸ்டார் படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். KU மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் கலந்த கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் 2024 ஏப்ரல் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பு படத்தின் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

we-r-hiring

அதைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கல்யாணி வச்சா வச்சா எனும் இரண்டாவது பாடல் இன்று மாலை 6.30 மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ