spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகாதலர் தினத்தில் கரம் பிடிக்கும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி

காதலர் தினத்தில் கரம் பிடிக்கும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி

-

- Advertisement -
திரையுலகின் நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அத்திரைப்படம் பிரபலம். காதல், கண்ணீர், சிரிப்பு என ஒரு பக்கா கமர்ஷியல் படமாக வெளியான கீதா கோவிந்தம் படம் தெலுங்கில் மட்டுமன்றி தமிழிலும் பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் இடம்பெற்ற இன்கே காவாலே பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இப்படத்தில் தான் முதல்முதலாக ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்து பணியாற்றினர். காதல், ரொமேன்ஸ், திருமணம் என அனைத்து காட்சிகளிலும் அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதில் அழியா இடத்தைப் பிடித்தனர் இந்த ஜோடி.

we-r-hiring
இப்படத்தைத் தொடர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இப்படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும், வெளிநாடுகளுக்கு ஒன்றாக உலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அடிக்கடி ஒன்றாக டிரிப் அடிப்பது மீடிக்களில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும், தாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என்று தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.

 

குஷி படம் விஜய் தேவரகொண்டாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பேமிலிஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல, ராஷ்மிகாவும் தெலுங்கில் மட்டுமன்றி தற்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் காதலர் தினத்தன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ