Homeசெய்திகள்சினிமாவிஜய் கட்சிக்கு ஆதரவா? - யுவன் ஷங்கர் ராஜா

விஜய் கட்சிக்கு ஆதரவா? – யுவன் ஷங்கர் ராஜா

-

- Advertisement -

விஜய் கட்சிக்கு ஆதரவா? - யுவன் ஷங்கர் ராஜாகோவையில் அக்டோபர் 12ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

AI – தொழில் நுட்பத்தினால் அடுத்த 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்க போவதில்லை என தெரிவித்தார். அதே சமயம் AI தொழில்நுட்பத்தில் உண்மைக் தன்மை என்பது இருக்காது என்று ஏ ஆர் ரகுமான் கூறியது உண்மையே என கூறினார்.

திரையரங்கு கட்டணம் உயர்வா? எவ்வளவு?

விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு யுவன்சங்கர் ராஜா பதிலளித்துள்ளார். அதற்கு அவர் நேரிடையாக பதிலளிக்காமல், விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் என்று கூறினார். விஜய் கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக இசையமைத்து கொடுப்பேன் என தெரிவித்தார். விஜய்யின் கோட் படத்திற்கு யுவன் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ